சூதாட்ட நிலையங்களுக்கான அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிப்பு!
சூதாட்ட நிலையங்களுக்கான அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 250 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் விண்ணப்பதாரர்கள் புதிய உரிமக் கட்டணமாக 10 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும்.
உரிமத்தை புதுப்பிக்க 10 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும்.
அத்துடன், 500 மில்லியன் டொலர்களுக்கு குறைவான முதலீடுகளுக்கு, உரிமக் கட்டணம் 5 பில்லியன் ரூபாயும், புதுப்பித்தலுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 10 பில்லியன் ரூபாயும் ஆகும்.