அசாதாரண காலநிலையால் 10,000ற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழையினால் 3,518 குடும்பங்களைச் சேர்ந்த 10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி அநுராதபுரம் மாவட்டத்தின் கிழக்கு நுவரகம் பலாத்த பகுதியில் பெய்த கடும் மழையினால் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் நிவிதிகல, கொடகவெல மற்றும் பலாங்கொட ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினாலும், பலத்த காற்று வீசியமையாலும் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 8,000 பேரும், திருகோணமலையில் 1,334 பேரும், கிளிநொச்சியில் 946 பேரும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.