கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு

கண்டி – மடுல்கல பிரதான மார்க்கத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்பட்டுள்ளது.

அதேநேரம், நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று (21) பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மத்திய, சபரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.