அரச பணியாளர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு - அமைச்சரவை வழங்கிய அனுமதி!

அரச பணியாளர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபாயை இந்த மாதம் முதல் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச பணியாளர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு - அமைச்சரவை வழங்கிய அனுமதி!

2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு அமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச பணியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வாழ்க்கை செலவு கொடுப்பனவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபாவை இந்த மாதம் முதல் வழங்குவதற்கான யோசனை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்தார்.

அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது

அதேநேரம், வைத்தியர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவை 35 ஆயிரம் ரூபாவில் இருந்து 70 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆய்வுக் கொடுப்பனவை 25 சதவீதத்தினால் அதிகரித்து இந்த மாதம் முதல் வழங்கவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.