நானுஓயாவில் பேருந்து விபத்து இடம்பெற்ற பகுதியில் கவிழ்ந்த லொறி - சாரதிகளை எச்சரிக்கும் பொலிஸார்!
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈஸ்டல் பகுதியில் ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈஸ்டல் பகுதியில் ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்
இதன்போது லொறியின் நால்வர் பயணித்த நிலையில் இருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் செங்குத்தான இவ்வீதியில் சிறிய வளைவு ஒன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தேயிலை மலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வீதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இவ்வீதி செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் என பல அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள போதும், ஒருசில கனரக வாகனங்கள் இவ்வீதியில் பயணிப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.