அரிசி நெருக்கடிக்கு ரணில் தான் காரணம்!
சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தவறான தகவல்களை வெளியிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகம் , வர்த்தகம் , உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
டி.வி.சானக்க, நாடாளுமன்ற உறுப்பினர்,
“இந்த அரசாங்கத்தின் முதல் பெரிய மோசடியை வெளிப்படுத்துவதற்கு வருந்துகிறேன்.
இந்த நேரத்தில் நாட்டில் சிவப்பு பச்சை அரிசி இல்லை. தெற்கில் உள்ள மக்கள் பெரும்பாலும் சிவப்பு பச்சை அரிசியை தான் சாப்பிடுகிறார்கள். சிவப்பு பச்சை அரிசி இன்று 280 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் கட்டுப்பாட்டு விலை 220 ரூபாய் ஆகும்.
அரிசி மாபியா காரணமாக கடந்த மாதத்தில் மட்டும் நாட்டு மக்களிடமிருந்து 4875 மில்லியன் திருடப்பட்டுள்ளது.
இது யார் என்று கண்டுபிடிக்கவும்.
இதுவே இந்த அரசின் முதல் மோசடி.” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க,
“சிவப்பு பச்சை அரிசியில் சிக்கல் உள்ளது. காரணம் என்ன? தெற்கில் இருந்த சிவப்பு அரிசி கடந்த அரசாங்கம் மூலம் இருபது கிலோ வீதம், சிவப்பு அரிசி உற்பத்தி செய்யாத பகுதிகளுக்கு விநியோகித்த காரணத்தினால் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டது.
அரிசி பற்றாக்குறையில் இரு வழிகளில் தலையிட்டுள்ளோம்.
முதலில் 70,000 மெட்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அரிசி விலையை உயர்த்தியதன் மூலம் சுமார் 125 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தவறான ஒரு கருத்து.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தவறான தகவல்களை பரப்பினால், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த அரசாங்கம் செய்த வேலைகளால் தான் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று.” என தெரிவித்தார்.