இலவு காத்தகிளியாக அரசாங்கம்; முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிப்பாரா!
முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வி சான்றிதழ்களை சமர்பிக்கும் வரையில் அரசாங்கம் காத்திருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ சபாநாயகரின் கல்வித் தகைமைகள் தொடர்பில் அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றோம்.
அவருக்கு தேவையான கால அவகாசத்தை வழங்க தீர்மானித்துள்ளோம். தேவையான சான்றிதழ்களை விரைவில் சமர்பிப்பார்.” எனத் தெரிவித்தார்.