வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓட்டமாவடி பகுதிக்கு றவூப் ஹக்கீம் விஜயம்!
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இடைத்தங்கள் முகாமில் தங்கியிருந்த மக்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் பார்வையிட்டார்.
இதன்போது பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் தொடர்பிலும் விசாரித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீமுடன் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம், கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் உயர் பீட உறுப்பினருமான சட்டத்தரணி ஹபீப் றிபான், உயர்பீட உறுப்பினரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மௌலவி ஹாமீத் சிறாஜி உள்ளிட்ட பலர் சமுகமளித்திருந்தனர்.