மறைமுகமாக நயன்தாரா போட்ட பதிவு!

மறைமுகமாக நயன்தாரா போட்ட பதிவு!

எப்போதும் தான் உண்டு தனது வேலை உண்டு என இருப்பவர் நடிகை நயன்தாரா.

அவர் கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகர் தனுஷ் மீது நேரடி தாக்குதல் நடத்தி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

தனது திருமண வீடியோவில் ஒரு சின்ன காட்சிகளை நானும் ரவுடித்தான் படத்தில் இருந்து பயன்படுத்தியதற்கு ரூ. 10 கோடி நஷ்டஈடு தனுஷ் கேட்கிறார் என கூறியிருந்தார்.

இப்போது தனது அனுமதி இல்லாமல் நயன்தாரா நானும் ரவுடித்தான் காட்சிகள் பயன்படுத்தியதற்காக நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் தனுஷ்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில் அவர், கர்மா என்ன சொல்கிறது என்றால், பொய்களைப் பேசி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் கெடுக்க நினைத்தால், அது அசலும் வட்டியுமாக உங்களிடமே மீண்டு வந்து சேரும்" என்று சூசகமாகப் பதிவிட்டிருக்கிறார்.

தனுஷ்-நயன்தாரா பிரச்சனை பரபரப்பாக போகவே அவராக இருக்குமோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்