மீண்டும் முடிசூடிய கிறிஸ்டோபர் நோலன் - சிறந்த நடிகையாக எம்மா ஸ்டோன்!

மீண்டும் முடிசூடிய கிறிஸ்டோபர் நோலன் - சிறந்த நடிகையாக எம்மா ஸ்டோன்!

ஹொலிவுட் சினிமாவின் பிரம்மாண்ட விழாவாகக் கருதப்படும் 96-வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்று வருகின்றது.

இதன்போது, 13 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஓப்பன்ஹைமரில் (Oppenheimer) நடித்தமைக்காக சிலியன் மர்பி சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

சிறந்த திரைப்படமாக 'ஓப்பன்ஹெய்மர்' விருது பெற்றதுடன், அதன் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இந்த வருடத்திற்கான சிறந்த இயக்குனர் விருதை வென்றுள்ளார்.

இதனிடையே, Poor Things  படத்திற்காக எம்மா ஸ்டோன் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்.

ரொபர்ட் டவுனி ஜூனியர், ஓப்பன்ஹைமருக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதையும், சிறந்த படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவுக்கான விருதையும் அந்த திரைப்படம் சுவீகரித்துக் கொண்டது.

அனாடமி ஒஃப் எ ஃபால் திரைப்படம் சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதை வென்றது.

இதுதவிர, சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை பிரிட்டன் வென்றது..

The Zone of Interest திரைப்படத்திற்காகவே அந்த விருது வழங்கப்பட்டது.

Twenty Days in Myuripol ஆவணப்படத்திற்காக உக்ரைன் தனது முதல் ஆஸ்கார் விருதை வென்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த விருது வழங்கல் நிகழ்வில் பிரபல ரெஸ்லிங் வீரர் ஜோன் ஸினா அரைநிர்வாணமாக தோன்றில் அரங்கத்தை கலகலப்பாக்கினார்.