நாடாளுமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!
![நாடாளுமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67ae06b06fa7e.jpg)
நாடாளுமன்ற தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையில் சில பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுவது குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விடயம் குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்த்ராணி கிரியெல்ல தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை வெளிப்புற விசாரணைக்கு பரிந்துரைக்குமாறு சபாநாயகரிடம் கோர தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஒரு நிறுவனம் அல்லது ஏனைய நிறுவனங்களில் இதுபோன்ற சம்பவம் பதிவாகிய பிறகு, வெளிப்புற விசாரணையை பரிந்துரைப்பது வழக்கமான நடைமுறை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான உள்ளக விசாரணைகள் நாளை (14) காலை ஆரம்பிக்கவுள்ளது.