இலங்கையில் காலநிலை மாற்றத்தால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு - தொடரும் அபாய எச்சரிக்கை....

இலங்கையில் காலநிலை மாற்றத்தால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு - தொடரும் அபாய எச்சரிக்கை....

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (05) அதிகாலை 06 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாத்தறை மாவட்டத்தில் 06 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், காலி, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் தலா 02 பேரும், கேகாலை மாவட்டத்தில் ஒருவருமாக மொத்தம் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தங்களில் 13 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையினால் 13 மாவட்டங்களில் 65,777 குடும்பங்களைச் சேர்ந்த 2,47,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 41 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள

அதேவேளை, 4,162 குடும்பங்களைச் சேர்ந்த 15,735 பேர் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதுடன், 2,592 குடும்பங்களைச் சேர்ந்த 10,820 பேர் 151 இடைதங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அத்தனகல ஓயாவிற்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை நாளை (06) மாலை 03 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்தனகலஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால், தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, கம்பஹா, வத்தளை, ஜா-எல, கட்டான, மினுவங்கொட ஆகிய பகுதிகளுக்கு தொடர்ந்தும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.