இணையேவாசிகளின் கனிவான கவனத்திற்கு - இதயமற்றவர்களை கண்டிப்போம்!

பெண்ணொருவர் சிறிமியொருவரை கொடூரமாக தாக்கும் காணொளியொன்று அண்மைய நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த காணொளி எந்தகாலகட்டத்தில் யாரால் எடுக்கப்பட்டது மற்றும் இந்த பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விபரங்கள் எதுவும் தௌிவில்லாத நிலையில் பலர் அதனை விமர்சித்து வருகின்றனர்.

இலங்கை அல்லது இந்தியாவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகம் நிலவுகின்றது.

எனினும், காணொளில் உரையாடல் தௌிவின்மை காரணமாக அதனை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது இன்னமும் உரிய தரப்பினர் அல்லது சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளின் கண்களில் இந்த காணொளி படவில்லையா என்பதை நாமறியோம்.

நேற்றும் இவ்வாறான சம்பவம் ஒன்றினை சுட்டிக்காட்டியிருந்தோம்.. இணையவாசிகள் மூலமாக முல்லைத்தீவில் இடம்பெற்ற சிறுவர் வன்கொடுமை சம்பவம் இன்று சட்டத்தின் கண்களுக்கு சென்றடைந்தது.

இந்தகாணொளியை எங்கேனும் காண்போர் அதனை முடிந்தவரை பகிர்ந்து உரிய தீர்வுக்கு வழிவகுப்போம்..  முடிந்தவரை சிறுவர்களை அவர்களின் உலகத்தின் மகிழச்சியாக வாழ வழிசெய்வோம்..