அல்லக்கை அமைச்சர்....!!!
விட்டேந்தி கோத்தாவிடம்
தவிசுபெற்ற தட்டேந்தி
அலி மகனே சப்றி
சோற்றுக்காய் நீ படும் பாட்டில்
சுதந்திரம்பற்றி நீ ஏதறிவாய்.
நீதி தவறி நின்ற உனக்கு
நிதி கொடுத்து பாதியில் பறித்து அயலகத்துறை கொடுத்து
அல்லக்கை உன்னை
அலையவிட்டார் போலும்.
சட்டம்பி நான்
சட்டென்று முடிவெடுப்பனென்று
பீத்திப் பிம்பத்தை காட்டி
கதிரையில உட்கார்ந்த உனக்கு
இப்பதானும் விளங்குதோ
உம்மா வேலிக்குள்ளால
பக்கத்து வீட்டு பாத்திமாவோட
சும்மா ஊர் வம்பளந்து
பேசுமாபோல இல்ல
வெளியுறவு எண்டு.
குடுத்த காசுக்கு கூவ வேணுமெண்டா
நீயும் தான் பாவம்
என்ன செய்வாய்?
மற்றவரை
கிலி கொள்ளவைக்க
நீயும் ஏதும்
பேசத்தானே வேணும்.
அலி என்னும் பெயரில்
உலாவும் எலி உனக்கு
புலி வேஷம் கூடித்தான் போச்சு.
பொல்லாக் குண்டும்
புகைக் குண்டும் போட்டுக் கொன்றவனின்
கோடிக்குள் இருந்து கூவாதே.
வலியறிந்த புலியின்
குணமறிந்து கூறுகிறேன்.
நாமார்க்குங் குடியல்லோம்
நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம்
நடலை யில்லோம்
ஏமாப்போம்
பிணியறியோம்
பணிவோ மல்லோம்.
-:நடராஜர் காண்டீபன்:-