விடுதலைப் புலிகளின் பெயரில் இயங்கும் கட்சிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலனாய்வுக் கட்சிகளே .
சிறிலங்கா புலனாய்வுத்துறையின் உருவாக்கத்தில் துரோகி பிள்ளையானின் தலைமையிலும்
துரோகி இன்பராசாவின் தலைமையிலும் இறக்கிவிடப்பட்டதே
‘தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் ‘புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி’யும்.
2009 க்கு முன்னர் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை உருவாக்கிய பிள்ளையானின் ‘தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்’கட்சியானது தமிழர்களிடத்தில் செல்வாக்கு செலுத்த முடியாத காரணத்தால் சிஐடி இன்பராசாவையும் களமிறக்கியது சிறிலங்கா புலனாய்வுத்துறை.
முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப்போவதாக தெரிவித்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து, அவர்களின் தொடர் செயற்பாடுகளை கண்காணித்து சிறிலங்கா புலனாய்வுத்துறைக்கு தகவல் அனுப்புவதே சிஜடி இன்பராசாவின் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலனாய்வுக் கட்சியின் பிரதான பணி.
தொடக்கத்தில் சிஐடி இன்பராசாவின்
பரப்ரபுரையை நம்பி அதில் இணைந்த பல முன்னாள் போராளிகள் பின்னர் இன்பராசாவின் அயோக்கியத்தனத்தை உணர்ந்துகொண்டு அதிலிருந்து வெளியேறினர்.
2018 இல் திருகோணமலையில் பிரதேச சபை தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி ஆனந்தசங்கரியுடன் கூட்டுவைத்து தேர்தலின் நின்ற சிஐடி இன்பராசாவின் புலனாய்வுக் கட்சிக்கு படுதோல்வியை பரிசாக வழங்கினர் திருகோணமலை மக்கள். வன்னிப்பகுதியில் ஓட ஓட விரட்டினர் இவர்களை தமிழ்மக்கள்.
தற்போது இனத்துரோகி பிள்ளையானுடன் இணைக்கப்பட்டு கிழக்கை மீட்போம் என்றுகூறி இரு துருவங்களாக புலனாய்வுத்துறையால் இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறையில் களமிறக்கப்பட்டுள்ளன இந்தப் புலனாய்வுக் கட்சிகள்.
மக்கள் இந்த இனத்துரோகிகளுக்கு தக்க பாடத்தை நிச்சயம் வழங்குவார்கள்.
மன்னாரிலிருந்து கேரளா கஞ்சா கடத்தியும்,அதன் விளைவாக ஏற்பட்ட தகராறில் சிக்குப்பட்டிருந்த சிஐடி இன்பராசாவிற்கு தற்போது பல வழக்குகள் திருகோணமலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதுபற்றி இன்பராசா தெரிவிக்கும் ஒலிப்பதிவுகள் நிறையவே வெளிவந்துள்ளது.
17 வயதுச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிஐடி இன்பராசாவுக்கு விடுதலைப்புலிகள் கொடுத்த தீர்ப்பு.
—————————————————
புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப் பகுதியில் புலிகளின் புலனாய்வு முகவராக செயற்பட்டுக்கொண்டிருந்த இன்பராசா எனும் நபர் அக்கிராமத்தில் தான் முகவராக தங்கியிருப்பதற்கு அடைக்கலம் கொடுத்த குடும்பத்தைச்சேர்ந்த ##### எனும் 17 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்தகாரப்படுத்தியிருந்தார்.
அச்சிறுமி வயிற்றில் பிள்ளையைச் சுமந்தபோதுதான் விடயம் வெளியில் தெரியவந்தது.
இதனை விசாரணை செய்த புலனாய்வுத்துறையினர் இன்பராசாவை கைதுசெய்து மரணதண்டனைக்காக தடுப்புக்காவலில் சிறையடைத்தனர்.
ஆனால் கிராம மக்களும் சில பெரியவர்களும் தலைவருக்கு அனுப்பிய கடிதம் மூலம் விடயம் அறிந்த தலைவர்
அச்சிறுமியின் எதிர்காலம் கருதி இன்பராசாவை அச்சிறுமிக்கே திருமணம் முடித்து வைக்குமாறு நீதி நிர்வாகத்துறையினருக்கு அறிவித்திருந்தார்.
நீதி நிர்வாகத்துறையினர் அதனை நடைமுறைப்படுத்தியிருந்தனர்.
சிறுமிக்கு திருமணத்திற்கான வயது வரும்வரை இன்பராசாவை
வட்டுவாகல் காவல்துறையினரின் பாதுகாப்பில் தடுப்புக்காவலில் அடைத்துவைத்த நீதி நிர்வாகத்துறை,
ஒரு வருடம் சிறைத்தண்டனையின் பின்னர் இன்பராசாவுக்கு அவரால் சீரழிக்கப்பட்ட அப்பெண்ணையே திருமணம் முடிக்கவேண்டுமென தீர்ப்பு வழங்கியது.
மறுத்தால் தனக்கு மரணதண்டனை என உணர்ந்துகொண்ட இன்பராசா அப்பெண்ணையே திருமணம் முடித்தார்.
இது அக்காலத்தில் தமிழ்
மக்களுக்கும் குறிப்பாக
இளைய சமுதாயத்திற்கும் ஒரு படிப்பினையை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ந்து புலிகளின் கண்காணிப்பில் இன்பராசா புலனாய்வுத்துறையினரின் முகாம்களில் சமையல் பணிகளிலும் கைதிகளைப் பராமரிக்கும் பணிகளும் ஈடுபடுத்தப்பட்டார்.
இருதடவை புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியைவிட்டு தப்பியோட முற்பட்டபோது பிடிக்கப்பட்டு மீண்டும் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
அங்கிருந்து தலைவருக்கும்,
பொட்டம்மானுக்கும் மன்னிப்புக்கடிதம் வரைந்த இன்பராசா இறுதியில்
கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இறுதிப்போரின் பின்னர் இராணுவத்திடம் ஓடிச்சென்று வட்டுவாகலிலும்,
ஓமந்தை சோதனைச் சாவடியிலும் இராணுவ சீருடையில் நின்று போராளிகளை இனங்காட்டும் தேசத்துரோகியாக மாறியிருந்தார்.
இன்பராசாவின் பழிவாங்கும் மனோநிலையில்,அவனது காட்டிக்கொடுப்பால் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த,அதேநேரம்
இன்பராசாவின் இரணைப்பாலை சிறுமி வன்புணர்வு விசாரணையை மேற்கொண்டவர்களில் ஒருவரான
திருமலை மாஸ்டர் என்பவர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டார்.
இறுதிப்போரின்போது கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட பல போராளிகளுக்கு நடந்தது என்ன என்பது
சிஐடி இன்பராசாவுக்கு நிச்சயம் தெரியும்.
அதனை அவரே அடிக்கடி உளறியும் வருகிறார்.
இன்பராசாவின் துரோகம் தன்னையும் தனது பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதை அறிந்துகொண்ட அவரது மனைவி பிள்ளைகளுடன் இன்பராசாவுக்கு தெரியாமல் இலங்கையைவிட்டு வெளியேறி வெளிநாடு சென்றனர்.
இன்பராசாவின் காவாலித்தனம்
———————————————-
இலங்கை சிஐடி முகவராக பணியாற்றிய இன்பராசா தனது செல்வாக்கை பயன்படுத்தி பல தமிழ்ப்பெண்களை அச்சுறுத்தி தனது பாலியல் இச்சைகளை அரங்கேற்றியிருந்தார். பல தமிழ்ப்பெண்களுக்கு இரவு வேளைகளில் தொலைபேசியில் வாய்க்குவந்தபடி பேசுவதும் அச்சுறுத்துவதும் என தொடர்ந்தது இன்பராசாவின் காவாலித்தனம்.
இதேவேளை அச்சுதன் எனும் சிஐடி முகவரின் சகோதரி ஒருவரை மணம் முடிப்பதாக கூறி அப்பெண்ணை ஏமாற்ற முற்பட்டு பின்னர் சிஐடி அச்சுதனாலும் அப்பெண்ணின் உறவினர்களாலும் நையப்புடைக்கப்பட்டு வேறுவழியின்றி தற்போது கட்டாய வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது இவர் தன்னை புலனாய்வுத்துறை போராளியாகவும், தளபதியாகவும் தெரிவித்து விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் தமிழர்களின் போராட்டத்தையும்,
கொச்சைப்படுத்தி வருகின்றார்.
தன்னைப்பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் நபர்களை அச்சுறுத்தியும்,காட்டிக்கொடுத்தும்,
வாய்க்குவந்தபடி பிதற்றியும்,
தூசண வார்த்தைகளாலும் அவதூறு பரப்பும் வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
சிஐடி இன்பராசா தன்னை ஒரு முன்னாள் போராளியாக கூறி அனுதாபம் தேடி புலம்பெயர் அமைப்புகளிடமும்,உறவுகளிடமும் பெரும் தொகைப்பணத்தை பெற்றுள்ளார்.சிலர் அதனை அறிந்து இன்பராசாவின் தொடர்பை துண்டித்துவிட்டனர்.சிலர் ஏமாந்து வருகின்றன்.சிஐடி இன்பராசாவை நம்பி ஏமாறாமல் மக்கள் விழிப்புணர்வோடு செயற்படவேண்டும்.
போராளி
அரவிந்தன்.