இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் செல்லும் கப்பல்கள் மூலம் வருமானமீட்ட முடிவு!
இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் செல்லும் கப்பல்கள் மூலம் வருடாந்தம் சுமார் 200 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் வகையில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீரியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாரா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் தற்போதுள்ள கடல்சார் வரைபடங்கள் பிரித்தானிய நீரியல் அலுவலகத்தினால் செயற்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்காலத்தில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை உருவாக்கும் பொறுப்பை கடற்படையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.