வயிற்றுவலிக்கு என வைத்தியசாலை சென்ற 21 வயதான கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்!

உணவினால் ஏற்பட்ட வயிற்று உபாதையால் சிகிச்சை பெறுவதற்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்ற 21 வயதான தில்மி சந்துனிகா என்ற பெண் திடீரென மரணித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

வயிற்றுவலிக்கு என வைத்தியசாலை சென்ற 21 வயதான கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்!

உணவினால் ஏற்பட்ட வயிற்று உபாதையால் சிகிச்சை பெறுவதற்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்ற 21 வயதான தில்மி சந்துனிகா என்ற பெண் திடீரென மரணித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

வைத்தியசாலையில், குறித்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தின் காரணமாக யுவதி மரணித்ததாக அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடுகண்ணாவை – பொத்தப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

வயிற்றுவலி காரணமாக குறித்த யுவதி நேற்று பேராதனை போதனா வைத்தியசாலையின் 7 ஆவது சிகிச்சை அறையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்போது அவருக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்டதாகவும், அதனையடுத்து அவர் உயிரிழந்ததாகவும் யுவதியின் சகோதரர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பேராதனை வைத்தியசாலையும், பேராதனை காவல்துறையினரும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்பொருட்டு அவரது சடலம் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த பெண் கடந்த நான்கு வருடங்களாக மகப்பேற்றுக்கான எதிர்பார்ப்புடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட வயிற்று உபாதை காரணமாக சொந்த ஊரில் உள்ள நாட்டு மருத்துவிச்சி ஒருவரிடன் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

எனினும் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்ற போதும், குணமேற்படாத காரணத்தால் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கும் உடல்நிலை தேறாத நிலையில், கண்டி போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.

எனினும், அவருக்கு ஊசி மருந்து வழங்கப்பட்ட போது, அந்த ஊசி மருந்து விஷமானதால் மரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இலங்கையில் தற்போது நிலவும் மருந்து பற்றாக்குறையின் இன்னுமொரு வடிவம் இதுவா என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.