சிவனொளி பாதமலைக்கு சென்ற 25 பேர் கைது!

போதைப் பொருட்களுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வார விடுமுறையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கொண்டு வருபவர்களை கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸார், மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிவனொளி பாதமலை யாத்திரை காலம் முடியும் வரை தேடுதல் பணி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.