ஈழத்தின் மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதன் அவர்கள் காலமானார்!
கிளிநொச்சி திருவையாறு நீர்வேலி ஆகிய இடங்களில் வசித்து வந்த மூத்தஎழுத்தாளரும், நீந்திக்கடந்த நெருப்பாற்றின் நூலாசிரியரும், கலைஞரும்,ஓய்வு பெற்ற திருவையாறு உபதபால் அதிபருமான நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்கள் இன்று 29/12/2024 இல் நீர்வேலி தெற்கு நீர்வேலி இல் இயற்கை எய்தியமையைக் கேட்டு் ஆழ்ந்த துயருடன் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னரது குடும்பம் ஆறுதலடையவும்,ஆத்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
போர்க்காலத்தில் எழுத்தாளராகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்றிய நா. யோகேந்திரநாதன், புலிகளின் குரல் நாடகங்கள் வழியாகவும் பிரபலமாக அறியப்பட்டார். இவர் இறுதி யுத்த அனுபவத்தை நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற நாவலாக எழுதியமை குறிப்பிடத்தக்கது.
அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கலை எமது வலைத்தளம் தெரிவித்துக்கொள்கிறது.