கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 35 எலும்புக்கூடுகள் இதுவரை மீட்பு!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் ஆறாம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நிறைவுபெற்றன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 35 எலும்புக்கூடுகள் இதுவரை மீட்பு!

இதன்போது, ஐந்து மனித எலும்பு கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இதுவரையில் 35 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்றைய தினம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படாது எனவும் அந்த பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்தப் பணிகள் முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, தடயவியல் காவல்துறையினர், கிராம உத்தியோகத்தர் மற்றும் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.