இலங்கையில் இதுவரை 36 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
இலங்கையில் நடப்பாண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடுமுழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 36 பேர் உயிரிழந்ததுடன் 28 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலப் பகுதியில் 60க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அதிக எண்ணிக்கையிலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் போது இடம்பெற்றவையாகும்.
எவ்வாறாயினும், சில துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு தனிப்பட்ட தகராறுகளும் காரணமாக உள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழப்பு மற்றும் காயமடைதல் சம்பவங்கள் தவிர, ஆறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் எந்தவித உயிரிழப்புகளும் அல்லது காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.