சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் அரசியலும்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் அரசியலும்!

பிரதேச வைத்தியசாலை, ஆதார வைத்தியசாலை போன்றன சிறப்பாக இயங்கினால், அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் வைத்தியாசலைகளை மக்கள் கவனிக்கமாட்டார்கள்.

இதனால் சிலருக்கு குறிப்பாக சில வைத்தியர்கள், தனியார் வைத்தியசாலை பங்குதாரர்கள், மற்றும் தனியார் வைத்தியசாலை ஊழியர்கள், மருந்து மற்றும் மருத்துவ உபகரண மாபியாக்கள் என சிலருக்கு கணிசமான அளவில் கிடைக்க வேண்டிய வசூல் கிடைக்காமல் போகும்.

தனியார் வைத்தியசாலையின் சேவைகள் முற்றுமுழுதாக தேவை இல்லை என்று இங்கு யாரும் சொல்ல முடியாது. ஆனால், தனியார் வைத்தியாசலைகள் வளரவேண்டும் என்றால் அரச வைத்தியசாலை முடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படும் சமூகத்தின் புல்லுருவிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் மற்றுக் கருத்து எதுவும் இல்லை. இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சாவகச்சேரியில் ஒரு சிறிய தனியார் வைத்தியசாலையில் கிடைக்கும். சேவையைக் கூட, சம்பளத்துக்காகவும்,  பராமரிப்புச் செலவுக்காகவும் பல கோடிகளை மாதாந்தம் அரச செலவில் செலவு செய்யும் ஆதார வைத்தியாசலையால் வழங்கமுடியாது என்றால் அங்கே நிச்சயமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தவறு இருக்கும்.

நீண்ட காலமாக மகப்பேற்று விடுதி செய்ற்படவில்லை, ஒரு கட்டிடத்தை பல மில்லியன் ரூபாய் செலவுசெய்து கட்டி முடித்து அதுக்கு மூன்று தடவைகள் வைபவரீதியாக திறப்புவிழா செய்து, அப்பிடியே ஒவ்வொரு திறப்பு விழாவும் முடிந்த கையோடு 14-15 வருடமாக பூட்டிவிட்டு வரும் நோயாளர்கள் அருகில் இருக்கும் தனியார் வைத்தியசாலைகோ அல்லது யாழ் போதானா வைத்தியசாலைககோ சொல்ல வேண்டும்.

இந்த நிலைமை கவலைக்கிடமா போகும்போது, வைத்தியா். இராமநாதன் அா்ச்சுணா(Dr. Ramanathan Archchuna)  தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்று நினைத்தாா். மனித வளம் , பௌதிக வளம் விரயமாகிது, சத்தசைிகிச்சை கூடம் பாவனையற்றுள்ளது, இந்த பொருளாதார கஷ்டத்திலும் மக்களை இன்னும் தனியாா் வைத்தியசலயைத் தேடி ஓட வேண்டிய நிலைமை. 

இவை அனைத்தையும் சைய்யவே தனி மனிதனாக வைத்தியா். இராமநாதன் அா்ச்சுணா பல தடைளையும் தாண்டி களத்தில் இறங்கி போராடுகிறாா். இவ்வாறு துணிச்சல்மிக்க நேர்மையான அதிகாரிகள் சமூகத்திற்காக சவால்களை எதிர்கொள்ளும்போது மக்கள் இப்பிடியான முறைகேடுகளை தட்டிக்கேட்க வேண்டும்.

துணிச்சலோடு முன்வந்து இவா் போன்ற நோ்​மையான அதிகாரிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். என்பதே தற்போது பலரது கருத்தாக உள்ளது.