கிளிநொச்சியில் மிளகாய் அறுவடை

கிளிநொச்சி - கரியாலை நாகபடுவான் பகுதியில் இன்று மிளகாய் அறுவடை இடம்பெற்றுள்ளது.
முழங்காவில் விவசாய போதனாசிரியர் ம.மகிலன் தலைமையில் நடைபெற்ற குறித்த அறுவடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, முழங்காவில் மறு வயற் பயிர் உற்பத்தியாளர் அமைப்பினர் மற்றும் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் என பலரும் கலந்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.