வௌ்ள அபாயம் - அனர்த்த நிலைமையை கட்டுப்படுத்த 42 கடற்படை குழுக்கள்!

வௌ்ள அபாயம் - அனர்த்த நிலைமையை கட்டுப்படுத்த 42 கடற்படை குழுக்கள்!

எதிர்வரும் காலங்களில் வெள்ளம் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாகவும் அந்தநிலைமையை எதிர்கொள்வதற்காக 42 குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த குழுக்களில் 150க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திடீர் வெள்ளம் ஏற்பட்டால் மக்களை மீட்க மூன்று விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் ஹிங்குராங்கொட ஆகிய இடங்களில் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பயிற்சி பெற்ற குழுவும் விமானத்துடன் தயாராக இருப்பதாகவும் விமானப்படை அறிவித்துள்ளது.

இதேவேளை, அவசர வெள்ள நிலைமையை எதிர்கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.