வாழைச்சேனையில் 65 வயது மதிக்கதக்க முதியவர் அடித்து கொலை

வாழைச்சேனையில் 65 வயது மதிக்கதக்க முதியவர் அடித்து கொலை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளத்துச்சேனை, பேரில்லாவெளியில் நேற்றிரவு 11 மணியளவில் 65 வயதுடைய வயோதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் கணபதிப்பிள்ளை தாமோதரம் (வயது 63) என அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், கொலையாளிகள் அயலில் வசித்து வந்த மாவடிவேம்பை சேர்ந்தவர்கள் என சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர். 

கொலைக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி திரு லசந்த பண்டாரவின் வழிகாட்டலில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி திரு சம்பத் தலைமையிலான வை.தினேஷ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.