வாழைச்சேனை பாலீஸ்வரர் ஆலய வருடாந்த திரிச்சூல வேட்டை திருவிழா

வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் ஏழாவது நாள் திரிசூல வேட்டைத் திருவிழா செவ்வாய்க்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது.
கடந்த புதன்கிழமை (02.04.2025) கொடியேற்றத்துடன் ஆரம்பமான பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாள் திரிசூல வேட்டைத் திருவிழா செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதுடன் வியாழக்கிழமை தேரோட்டம் மற்றும் வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
இதன்போது வசந்த மண்டப பூசை இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம் வந்து ஆலய முன்றலில் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் திரிசூல வேட்டைத் திருவிழா இடம்பெற்று.
பூசைகள் யாவும் பிரதமகுரு பிரதிஸ்டா பூசணம், ஜோதிட ரத்னாகரம், வேத ஆகம கிரியா அலங்கார பூசனம் சிவஸ்ரீ குமார பிரபாகரக் குருக்கள் மற்றும் ஆலய குரு சக்தி பூஜா துரந்தர், சிவன் அலங்கார திலகம், வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ.ப.கண்ணன் குருக்கள் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.