லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!
லிட்ரோ கேஸ் நிறுவனம் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பதவி விலகியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், ஒக்டோபர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாய்க்கும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு 694 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.