இரவு வேளையில் வானிலையில் ஏற்படும் மாற்றம்!

இரவு வேளையில் வானிலையில் ஏற்படும் மாற்றம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (12) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.