போலி விசாவில் வெளிநாடு செல்ல முயற்சித்த பெண் கைது!
போலி விசாவை பயன்படுத்தி, வெளிநாடு செல்ல முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி விசாவை பயன்படுத்தி, வெளிநாடு செல்ல முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், அந்த பெண்ணுக்கு உடந்தையாக இருந்த, குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.