வட்டுக்கோட்டையில் உயிரிழந்த கைதி இறுதியாக பேசிய வார்த்தைகள்! (காணொளி)
வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 26 வயதுடைய இளைஞர் பொலிஸ் நிலையத்தில் இறுதியாக பேசிய காணொளியொன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸாரின் கைது செய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 26 வயதுடைய இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை உயிரிழந்தார்.
குறித்த இளைஞரின் உயிரிழப்பு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற அதிகார எல்லைக்குள் இடம்பெற்றமையால், இளைஞனின் உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகள் யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன.