மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவமணிகளின் பெற்றோர்களின் ஆதங்கம்!!

மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவமணிகளின் பெற்றோர்களின் ஆதங்கம்!!

திறமையான அதிபர் வேண்டும் என்று தாங்கள் நினைப்பதோடு பாடசாலையில் பெற்றோர்களிடம் வேண்டுமென்றால் வாக்கெடுப்பு நடாத்தி பாருங்கள் என்று நம்பிக்கையுடன் கூறும் பெற்றோர்கள் வேண்டுமென்றால் அதிபரின் நிரந்தர நியமனத்திற்காக யார் காலிலும் விழ தயார் என்று கூறும் நெகிழ்ச்சியான பேச்சினை பழைய மாணவர்கள் எப்படி எடுக்க போகிறார்கள்?? 

யாழில் மத்திய கல்லூரி அல்லாத பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை படிப்பிப்பதற்கா போட்டிருக்கும் பழைய மாணவர்களில் ஒருசிலர், கொழும்பில் பிரபலமான ரோயல், செந்தோமஸ் போன்ற பாடசாலைகளில் போட்டிருக்கும் பழையமாணவர்களில் ஒரு சிலர், வெளிநாடுகளில் படிபிற்காக தமது குழந்தைகளை போட்டிருக்கும் பழைய மாணவர்களில் ஒரு சிலரே தற்போது யாழ் மத்தியில் கல்வி பயிலும் மாணவ மணிகளுடனும் அவர்களின் எதிர் காலத்துடனும் விபரீத விளையாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

பழைய மாணவர்களில் ஒரு சிலர் என குறிப்பிடுவதினூடாக பழைய மாணவர்களில் பலர் நன்றியுடன் தாம் கல்வி கற்ற பாடசாலைக்கு உதவுவதற்கு என்றும் தயாராகவே உள்ளனர் என்பதே உண்மையான நிலவரமாகும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.