தமிழீழத் தேசியக் கொடி நாள்-பிரம்ரன் நகரசபை!
21/11/2023 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி நாள் பிரம்ரன் நகரபையில் எழச்சிகரமாகவும், உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றது.
Dr குமுதினி குணரட்ணம் மற்றும் விஜிதரன் வரதராஜா ஆகியோர் வழிநடத்தினர் முதலாவதாக பூர்வக் குடிகளின் நில அங்கீகாரம் கொடுக்கப்பட்டு , நீண்ட விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்கட்கும் , போர்க் காலத்தில் அரச பயங்கரவாதங்களால் கொல்லப்பட்ட மக்களுக்கும் ஒரு நிமிட மெளன அஞ்சலி செய்யப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது .
மாவீரர்களின் குருதியாலும் , மக்களின் தியாகத்தாலும் உருவான தமிழீழத் தேசியக்கொடி பற்றியும் தமிழீழத் தேசியத்தலைவரால் இதே நாள் 1990 ம் ஆண்டு முதன் முதல் தமிழீழத் தேசத்திற்கான தமிழீழத் தேசியக் கொடி தலைவர் அவர்களால் ஏற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்ட வரலாறுகள் பகிரப்பட்டதுடன் பெருமதிப்புக்குரிய பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் அவர்கள் தமிழ்மக்களிற்காக வாதாடி, போராடி, தீவிர முயற்சிகள் செய்து வருவது முதல் அவர் என்றும் தமிழர்களுடன் செயலாற்றி வருவதற்காக நாடுகடந் அரசாங்கத்தின் சார்பிலும் தமிழ்மக்களின் சார்பிலும் வாழ்த்துக்களும், நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்ற முன்வந்தமை தமிழர்கட்கான முதல் அங்கீகாரமாக அனைவரும் பகர்ந்து கொண்டனர் பின்னர் தமிழீழத் தேசியக்கொடி நாள், தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை, சனல் 4 காணொளி, முள்ளுவாய்க்கால் நினைவு முற்றம், என்பன பற்றி எடுத்துக்கூறியது மட்டுமின்றி , தமிழர்கட்கு நீதி கிடைக்கும்வரை எப்போதும் துணை நிற்பதாகவும் மேயர் உறுதிகூறினார்.
தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி மக்கள் மற்றும் தேசிய ஊடகமான C B C மற்றும், Kirishna Live ஊடகம் அனைத்து பிரமுகர்கள் , நகரசபை ஊழியர்கள் , காவலர்கள் மத்தியில் பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிறவுனால் ஏற்றி வைக்கப்படது.
அனைத்து மக்களும் ஆனந்தக் கண்ணீரோடும் பெருமகிழ்சியோடும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழர்கட்கு இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க வரலாற்று நாள் . தமிழீழத் தேசியக் கொடிக்கு அணைவரும் தலை சாய்த்து தமிழீழத் தேசியத் தலைவரால் ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக்கொடியை தமிழீழத்திலும், சர்வதேசம் எங்கும், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஏற்ற முழுமையாக உழைப்போம்மென உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டது.
"தமிழர் தலைவிதி தமிழர்கையில்"
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்