நாடு முழுவதும் விசேட சுற்றி வளைப்பு - 42 பேர் கைது!

கொலன்னாவ பகுதியில் இன்று அதிகாலை முதல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு போதைப்பொருட்களை வைத்திருந்த 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும்  விசேட சுற்றி வளைப்பு - 42 பேர் கைது!

காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து நடத்திய விசேட சுற்றிவளைப்பின்போது, குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். 

 அவர்களிடமிருந்து ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா ரக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.