கொழும்பு – களனி பாலத்திற்கு அருகில் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு – புதிய களனி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் ஆயுதம் ஒன்றினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – களனி பாலத்திற்கு  அருகில் தாக்குதல் -  ஒருவர் உயிரிழப்பு!

நேற்றிரவு இடம்பெற்ற இந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்தவர் சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உயிரிழந்தவரின் கைப்பேசியை கோரியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து சந்தேகநபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். 

அதில் காயமடைந்த நிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

 சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.