கரப்பான் பூச்சியால் வீட்டை கொளுத்திய நபர்!
ஜப்பானில் வீட்டிற்குள் புகுந்த கரப்பான் பூச்சியை கொல்ல நபர் ஒருவர் முயன்றபோது வீடு தீப்பற்றியுள்ளது.
கரப்பான் பூச்சியை கொல்வதற்காக அளவுக்கு அதிகமான பூச்சிக்கொள்ளி ஸ்ப்ரேவினை பயன்படுத்திய போதே வீடு தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த வீட்டில் வசித்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.