டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது!

பிரபலமான செய்தி பரிமாற்று செயலியான டெலிகிராமின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்தது, போதைப்பொருள் விநியோகம், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும், இவர் தனது தளத்தின் குற்றவியல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட துரோவ் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.