கார் வீதியை விட்டு விலகி விபத்து : ரஷ்ய இளைஞரும் இலங்கைப் பெண்ணும் பலி!

கண்டி, மீமுரே - ஹுன்னஸ்கிரிய வீதியில் புஸ்ஸேஎல பிரதேசத்தில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ரஷ்ய இளைஞர் ஒருவரும் இலங்கைப் பெண்ணொருவருமே உயிரிழந்தனர்.

இதன்போது, காரில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த ரஷ்ய இளைஞர் 28 வயதுடையவர் எனவும், இலங்கை பெண் 51 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.