பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்ப விரிவான வேலைத்திட்டம்!
பண்டைய காலங்களில் நாட்டின் பிரதான வருமான மூலமாக இருந்த பலசரக்குகள் தொழில்துறையை மீள கட்டியெழுப்ப விரிவான வேலைத்திட்டமொன்று அவசியமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதற்கான சரியான திட்டத்தை தயாரிக்குமாறு இலங்கை பலசரக்குகள் சங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தனியார் துறைகளை ஒன்றிணைத்து இந்த வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற இலங்கை பலசரக்குகள் சங்கத்தின் 19 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
உலகிலேயே சிறந்த பலசரக்கு பொருட்கள் இலங்கையில் இருந்தன.
எனினும், கடந்த 30, 40 ஆண்டுகளாக, பலசரக்குகள் துறையின் பின்னடைவால், பலசரக்கு மூலம் இலங்கைக்கான வருமானம் குறைந்துள்ளது.