லிட்ரோ மற்றும் லாப்ஸ் சமையல் எரிவாயுக்களின் விலைகள் பெருமளவில் அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (04) மீள்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சமையல் எரிவாயு கொள்கலனின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ மற்றும் லாப்ஸ் சமையல் எரிவாயுக்களின் விலைகள் பெருமளவில் அதிகரிப்பு!

இது தொடர்பான அறிவிப்புக்களை வழங்குவதற்காக லிட்ரோ நிறுவனத்தின் ஊடக சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 3 ஆயிரத்து 470 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 137 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஆயிரத்து 393 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின்  விலை 63 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி. அதன் புதிய விலை 650 ரூபாயாகும். 

The price of a 12.5kg cylinder has increased by Rs. 343, resulting in a new price of Rs. 3,470.

For a 5kg cylinder, the price has risen by Rs. 137, now priced at Rs. 1,393.

The 2.3kg cylinder has seen a price hike of Rs. 63, with the new price set at Rs. 650.

Consumers using LP Gas for domestic purposes should take note of these price changes.

இதேவேளை, லாப் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டு  1595 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

அத்துடன், 12 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 3985 ரூபாய் என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படும்.

---------------------------------------------------------------------------------------------------------