கோதுமை மாவுக்கு விலை அதிகரிக்குமா? விலை சூத்திரமொன்றை தயாரிக்க யோசனை! 

இலங்கையில் கோதுமை மாவுக்கு விலைச் சூத்திரமொன்றைப் பேணிவது தொடர்பான யோசனையொன்று அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவுக்கு விலை அதிகரிக்குமா? விலை சூத்திரமொன்றை தயாரிக்க யோசனை! 

பல தரப்பினரும் தமக்கு விரும்பியவாறு விலைகளைத் தீர்மானிப்பதற்கு இடமளிக்காமல் இருக்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்படுவதாக அந்த குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நாடாளுமன்றில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன். நாட்டிலுள்ள களஞ்சியசாலைகளில் தற்பொழுது இருப்பில் உள்ள கோதுமை மாவின் அளவு தொடர்பில் கணக்காய்வொன்றை மேற்கொண்டு 2 மாதங்களுக்குள் அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை முழுவதிலும் உள்ள வணிக நிலையங்களில் வெவ்வேறு விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும் நிதி அமைச்சு வழங்கிய விலைக்கு அமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 198 ரூபாவுக்கே விற்பனை செய்ய முடியும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

கோதுமை மாவின் விலையை நிர்ணயிப்பதில் இரண்டு விலைக் கணக்கீடுகள் பயன்படுத்தப்படுவதாகவும், இந்தநிலை மாற்றப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.