மனித உரிமைகள் தொடர்பான அண்மைக்கால சட்ட அபிவிருத்திகள் குறித்து  அதிருப்தி! 

மனித உரிமைகள் தொடர்பான அண்மைக்கால சட்ட அபிவிருத்திகள் குறித்து  அதிருப்தி! 

 பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழு நாட்டில் மனித உரிமைகள் தொடர்பான அண்மைக்கால சட்ட அபிவிருத்திகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது.
 
கனடா, மலாவி, மொண்டினேகுரோ, வடக்கு மசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இலங்கை  தொடர்பான குறித்த முக்கிய குழுவின் சார்பாக ஐக்கிய நாடுகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் துணை நிரந்தர பிரதிநிதி ரீட்டா பிரெஞ்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
 
இணைய வழி பாதுகாப்பு சட்டம் சுமார் அனைத்து வகையான வெளிப்பாடுகளையும் குற்றமாக்கலாம் என்பதுடன் இது கருத்து சுதந்திரத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் மனித உரிமைகள் கடமைகள் மற்றும் அர்ப்பணிப்புகளுடன் குறித்த சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை அவர்  வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக இலங்கையின் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.