பாடசாலை மைதானத்தில்  வெடிப்புச் சம்பவம் - மூன்று மாணவர்கள் காயம்!

கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட மாவத்துர கலைமகள் தமிழ் வித்தியாலய  மைதானத்தில் அடையாளம் தெரியாத பொருள் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று மாணவர்கள் கம்பளை ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மற்றும் ஒரு மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மூன்று மாணவர்களும் பாடசாலை மைதானத்திற்கு சென்ற போது, பந்து போன்ற ஒன்றைப் பார்த்த மாணவர் ஒருவர் அதை உதைத்து விளையாடிய  போது  அந்த பொருள் திடீரென வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தால் மாணவனின் காலணி ஒன்று உடைந்ததுடன், அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் வெடிபொருள் ஒன்றே வெடித்து சிதறியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்று பிற்பகல் 01:35 அளவில் பாடசாலையினால் தனக்கு வழங்கப்பட்ட தொலைபேசி அழைப்பின் பிரகாரம், குறித்த இடத்திற்கு சென்ற போது பாடசாலையில் கரும் புகை சூழ்ந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து பாடசாலை அதிபரிடம் வினவிய போது, ​​வெடி விபத்து குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என பொலிஸார் தெரிவித்ததாக குறிப்பிட்டார். 

சம்பவம் தொடர்பாக கம்பளை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.நிஹால் அழககோனிடம் வினவ முயன்றபோதும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை