மரதன் போட்டியில் பங்குபற்றிய மாணவன் உயிரிழப்பு

அக்கரைப்பற்று – திருக்கோவில் பகுதியில் மரதன் போட்டியில் பங்குபற்றி இருந்த மாணவரொருவர் இன்று உயிரிழந்தார்.
பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக இடம்பெற்ற மரதன் போட்டியில் பங்கேற்றிருந்த குறித்த மாணவன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகத்தினரது அசமந்தபோக்கு காரணமாகவே குறித்த மாணவன் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திருக்கோவில் - பொத்துவில் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்காரணமாக திருக்கோவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.