ஜனாதிபதியை சந்திக்க துவிச்சக்கர வண்டியில் கொழும்பை நோக்கி பயணிக்கும் மாணவி!
போதை வஸ்துக்கு எதிராகவும், சிறுவர் துஷ்யோகத்துக்கு எதிராகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடசாலை மாணவி ஒருவர் துவிச்சக்கரவண்டியில் கொழும்பை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளார்.
காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி அவர் தனது பயணத்தை நேற்று ஆரம்பித்தார்.
புதிய காத்தான்குடி - பதுறியா பாடசாலை மாணவியான பாத்திமா நதா தனது கொழும்பு நோக்கிய பயணத்தில் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை கொழும்பில் நிறைவு செய்து திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து தனது மகஜரையும் கையளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் பெண்களுக்கு எதிரான வன்முறை போதைப் பொருள் பாவனை ஆகியவற்றுக்கு எதிரான தனது கோஷத்தை முன்வைக்கும் முகமாகவே அவர் இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளார்
மாணவிக்கு உறுதுணையாக அவரது தாயாரும் சகோதரர் ஒருவரும் முச்சக்கர வண்டியில் உடன் செல்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.