இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைமையானது தவறான வழியில் செல்லுகிறது என்பதை நாட்டு மக்கள் நம்புவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சுகாதாரக் கொள்கைக்கான மற்றும் சுயாதீனமான ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் பாலிசி (IHP) மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் முடிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின்படி 75 சதவீத இலங்கையர்கள் இலங்கை தவறான திசையில் செல்கிறது என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த கருத்துக்கணிப்பானது பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் ஏனைய நாட்டு மக்களின் நிலைப்பாடுகளை விட பாரிய அதிகரித்த போக்கை காட்டுகிறது என IHP தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான இலங்கையின் போக்கு குறித்த கணக்கெடுப்பு அறிக்கையில் இலங்கை சரியான பாதையில் செல்கிறது என்று நம்பிக்கை வெளியிடுபவர்கள் 3 சதவீதம் கூட இல்லை என்பது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாரிய சாவல் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.