BREAKING NEWS : இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் திடீர் திருத்தம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைக்க  தீர்மானித்துள்ளது.

BREAKING NEWS : இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் திடீர் திருத்தம்!

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 356 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது..

இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 423 ரூபாயாக விற்பனை செய்யப்படும். 

லங்கா ஒட்டோ டீசல் விலை 05 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 356 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

லங்கா சுப்பர் டீசல் விலையும் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 431 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மண்ணெண்ணெய் விலை 7 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 249 ரூபாவாகும் என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


Fuel prices will be revised with effect from midnight today. 

Petrol 92 reduced by Rs.9 per litre to Rs.356, 

Octane 95 increased by Rs.3 to Rs.423, 

Auto Diesel increased by Rs.5 to Rs.356, 

Super Diesel increased by Rs.10 to Rs.431, 

 Kerosene increased by Rs.7 to Rs.249 - CEYPETCO