தினேஷ் ஷாஃப்டரின் மரணத்துக்கான காரணம் நாளை அறிவிக்கப்படும்!
ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் மேலாளர், வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்துக்கான காரணத்தை நாளை (01) அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் இன்று (31) தெரிவித்தார்.
தினேஷ் ஷாஃப்டரின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிவற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையத்து, குறித்த மரணத்துக்கான காரணத்தை நாளை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய தெரிவித்தார்.