மரக்கறி செய்கையாளர்களுக்கு இலவச உரம் வழங்க நடவடிக்கை!
மூன்று மாவட்டங்களை சேர்ந்த மரக்கறி செய்கையாளர்களுக்காக இலவசமாக உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குருணாகல், மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள 3,476 விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்படவுள்ளது.
கட்டார் நிறுவனமொன்றினால் இந்த இலவச உரம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.