ஜனவரியில் குமரிக்கடல் வழியாக இந்தியா நோக்கி நகரும் காற்று சுழற்சி!

இலங்கையின் தென்கிழக்காக, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சி நீடித்து வருகின்றது.

ஜனவரியில் குமரிக்கடல் வழியாக இந்தியா நோக்கி நகரும் காற்று சுழற்சி!

இலங்கையின் தென்கிழக்காக, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சி நீடித்து வருகின்றது.

இது இலங்கையின் தென் கடற் பிராந்தியத்தை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்ந்து நகர்ந்து, குமரிக்கடல் வழியாக அரபிக் கடல் நோக்கி சென்று, அதன் பின்னர் கேரளாவின் கரையோரமாக பயணிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி 03, 04, 05 மற்றும் 06ஆம் திகதியளவில் மேலும் ஒரு காற்று சுழற்சியானது இலங்கையின் கிழக்குப் பக்கமாக நகர்ந்து, தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே நிகழ்வுகள் காரணமாக எதிர்வரும் நாட்களில் இடையிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தென்கிழக்காக நிலைகொண்டுள்ள காற்று சுழற்சியானது இன்று இரவு இலங்கையின் தென்பகுதிக்கு வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.