வளி மாசுபாடு மீண்டும் அதிகரிப்பு - சுற்றாடல் அதிகார சபை

வளி மாசுபாடு மீண்டும் அதிகரிப்பு -  சுற்றாடல் அதிகார சபை

இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் வளி மாசுபாடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார், காலி உள்ளிட்ட இடங்களில் இவ்வாறு காற்றின் தரச் சுட்டெண் குறைவடைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் காற்றானது இலங்கையின் ஊடாக செல்வதன் காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.

எனவே, சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் முகக்கவசம் அணிவதால், பாதுகாப்பை பெறமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.